விக்ரம், சிம்பு படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: சிவகார்த்திகேயன் வழக்கு!

  • IndiaGlitz, [Tuesday,March 29 2022]

விக்ரம் மற்றும் சிம்பு படங்களை பிரபல தயாரிப்பாளர் விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான திரைப்படம் ’மிஸ்டர் லோக்கல்’. இந்த படத்திற்காக ரூபாய் நான்கு கோடி ரூபாய் பாக்கி தயாரிப்பாளர் தரவில்லை என சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் தனது மனுவில் தனது சம்பள பாக்கியை தரும்வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களை ஞானவேல்ராஜா விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக உள்ளதாக கூறப்படுகிறது.

தனது சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு செய்த வழக்கை மார்ச் 31ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.