வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் பின் ஒரு வலி இருக்கும்: 'அயலான்' குறித்து சிவகார்த்திகேயன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் இன்று பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. முதல் காட்சி முடியும் முன்பே இடைவேளை நேரத்தில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருவதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ‘அயலான்’ திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றே செய்துள்ளார். அதில், ‘வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கு பின்னும் ஒரு வலி நிறைந்த கதை இருக்கும். எல்லா வலி நிறைந்த கதைகளுக்கும், ஒரு வெற்றிகரமான முடிவு இருக்கும். வலிகளை ஏற்றுக் கொண்டு வெற்றிக்காக தயாராகுங்கள்.
எங்கள் ‘அயலான்’ திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பொழுதுபோக்குடன் இந்த பொங்கலை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து உள்ளனர்.
Every successful person has a painful story..
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 12, 2024
Every painful story has a successful ending..
Accept the pain and get
ready for SUCCESS!!! 💪👍
Here’s our #Ayalaan 👽 to the BIG SCREENS near you, Today 🙏
Enjoy this entertaining experience with your family & friends this Pongal… pic.twitter.com/7XZvLX7c6U
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments