'டான்' படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்: சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் அசத்தல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்’ திரைப்படம் வரும் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 'டான்’ படத்தின் பாடல் ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை ஆதித்யா என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் அதில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனின் ரொமான்ஸ் பார்வைகள் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்பட பலர் நடித்துள்ள 'டான்’ திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். ’டாக்டர்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை அடுத்து வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.