ரிலீஸ் ஆனது 'டான்': திரையரங்கில் ரசிகர்கள் முன் தோன்றிய சிவகார்த்திகேயன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சியை ஏராளமானோர் காத்திருந்து பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் டான் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
நெல்லை ராம் முத்துராம் சினிமா திரையரங்கின் சமூக வலைதளப் பக்கத்தில் ‘டான்’ திரைப்படம் 100 சதவீத என்டர்டைன்மென்ட் திரைப்படம் என்றும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் உறுதி என்றும் சிவகார்த்திகேயன் உட்பட ‘டான்’ பட குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ‘டான்’ திரைப்படம் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் திரையரங்கில் ரசிகர்கள் முன் சிவகார்த்திகேயன் தோன்றி கையசைத்ததை அடுத்து அவரைப் பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.
#DON ????#DONfromToday https://t.co/imt59Dq2r7
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 13, 2022
Our lovable #DON @Siva_Kartikeyan & his lovable fans ❤️#DONfromToday pic.twitter.com/WnlKUuN9ID
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments