அமுக்கு டுமுக்கு அமால் டுமால்: சிவகார்த்திகேயனின் 'டான்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘டான்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘டான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’அமுக்கு டுமுக்கு அமால் டுமால்’ என ஆரம்பிக்கும் இந்த பாடலை ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் கம்போஸ் செய்து பாடியுள்ளார் என்பதும் ரோகேஷ் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.
#Jalabulajangu, the first single from our #DON will be releasing tomorrow at 6 PM ??
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) December 15, 2021
A 'ROCKSTAR' @anirudhofficial MUSICAL ??
Lyrics by #Rokesh
Amukku dumukku amaal dumaal dhaa... ????@Siva_Kartikeyan @KalaiArasu_ @LycaProductions @Dir_Cibi @priyankaamohan pic.twitter.com/xBLTvUsEuP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com