'டான்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? 'டாக்டர்' வசூலை முந்துமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’டான்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

நேற்று முன்தினமே ’டான்’ திரைப்படம் பல வெளிநாடுகளில் பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டதாகவும், நேற்று தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் வெளியான ‘டான்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனையடுத்து ‘டான்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் திரைப்படம் 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’சீமராஜா’ படத்திற்கு பின்னர் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் ‘டான்’ என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இன்றும் நாளையும் கிட்டதட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் அடுத்த இரண்டு வசூல், முதல் நாள் வசூலை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் அந்த சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.