சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் குறித்த டாப் அப்டேட்!

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்தார் என்பதும் ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது என்பதும் தெரிந்ததே

இதில் ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு மட்டுமன்றி போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ’டாக்டர்’ படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுக்கும் விருந்தாக அந்த படத்தின் டீசர் இருக்கும் என்று கூறப்படுகிறது

நெல்சன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தில் பிரியங்கா அருள் என்பவர் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு படமான ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது என்றாலும் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் சுமார் 10 மாதங்கள் நடைபெறும் என்பதால் இந்த வருட இறுதியில் தான் அயலான் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

More News

யாக்கர் மன்னனைத் தமிழில் வாழ்த்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான்… வைரல் டிவிட்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், நடராஜனுக்கு தமிழில் வாழ்த்துச் சொல்லி டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில்

தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு கார் பரிசு… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இந்திய நிறுவனம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

ஆஸ்திரேலிய வெற்றியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு இப்படியொரு சிக்கலா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி பிரிஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்றது

ஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்!

அமெரிக்காவின் 49 ஆவது துணை தலைவராக (அதிபராக) கமலா டி.ஹாரிஸ் பொறுப்பு ஏற்று இருக்கிறார்.