சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் குறித்து சூப்பர் அப்டேட்

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அவர் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் ’அயலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் தயாரிப்பில் சமீபத்தில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இன்னொரு படமான ‘டாக்டர்’ என்ற படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வைக்கிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது. முதல்கட்டமாக இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் மிகப் பெரிய தொகைக்கு பெற்று உள்ளது. இதனை சன் டிவி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்பனையாகி அவரது வளர்ச்சியை நிரூப்பிக்கின்றது. மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை உள்பட மற்ற மற்ற வியாபாரங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது