ராகவா லாரன்ஸ், விஷாலை அடுத்து தீபாவளி ரிலீஸில் இணையும் சிவகார்த்திகேயன்?
- IndiaGlitz, [Wednesday,September 16 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவான ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் விஷாலின் ’சக்ரா’ படமும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் விஷாலை அடுத்து தீபாவளி ரிலீசில் சிவகார்த்திகேயன் படம் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி ’டாக்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தையும் ஓடிடியில் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ரகுல்பிரீத்தி சிங், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பதும் ரவிக்குமார் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.