'டாக்டர்' திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகம்

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாக்கிய ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகம், இந்தியா உள்பட உலகம் முழுவதும் ’டாக்டர்’ திரைப்படம் இதுவரை 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ திரைப்படம் அதிகபட்சமாக 86 கோடி ரூபாய் உலக அளவில் வசூல் செய்த நிலையில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே ’டாக்டர்’ திரைப்படம் தான் மிக அதிக வசூலை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னும் பல திரையரங்குகளில் ’டாக்டர்’ திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்த படம் ரூ.100 கோடி வசூலை இன்னும் ஒரு சில நாட்களில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வரும் வியாழக்கிழமை கேரளாவில் ’டாக்டர்’ திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து ’டாக்டர்’ திரைப்படத்தின் வசூல் கண்டிப்பாக 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’டாக்டர்’ திரைப்படத்தின் வெற்றி தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தை யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.