சில மாதங்கள் பிரேக் எடுக்க போகிறேன்.. சிவகார்த்திகேயன் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Sunday,April 30 2023]

ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு சில மாதங்கள் பிரேக் கொடுக்க போகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கின்றனர் என்பதும் அவ்வப்போது தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த தகவல்களை அதில் அவர்கள் பதிவு செய்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் சிவக்கார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்திற்கு சுமார் 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவும் வைரல் ஆகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென அவர் ட்விட்டர் கணக்கில் இருந்து சில காலம் விலகி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் சில மாதம் கழித்து மீண்டும் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் தனது படங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது இதே பக்கத்தில் தனது குழுவினர் பதிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் நடித்த இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதேபோல் அவருடைய இன்னொரு படமான ‘அயலான்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.