தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா: நடராஜன் குறித்து பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணிக்கு இந்த வெற்றி ஒரு ஆறுதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்றைய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் இறக்கப்பட்டார் என்பதும், முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் ’தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று குறிப்பிட்டு நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்ட நடராஜனுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் ஒரு தமிழனை இந்தியாவின் ப்ளூ ஜெர்சியில் பார்ப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
Great effort @Natarajan_91 brother ???????? Debut match in Australia against Australia and you did really well?? Extremely happy to see u in blue jersey,proud moment for all of us brother???? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா?? #INDvsAUS #Nattu pic.twitter.com/PZ0tFGQ4dg
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments