'சீதக்காதி'க்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 25வது படமான 'சீதக்காதி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. 'அய்யா ஆதிமூலம்' கேரக்டரில் நடித்துள்ள விஜய்சேதுபதியின் காட்சிகள் வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே படத்தில் இருந்தாலும் கிளைமாக்ஸ் வரை அய்யாவை வைத்துதான் கதை நகர்வதால் விஜய்சேதுபதி படம் முழுவதும் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருப்பதாகவே படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 'சீதக்காதி' படம் வெற்றியடைய நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 25வது படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ள விஜய்சேதுபதிக்கும் 'சீதக்காதி படக்குழுவினர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
நாளை சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில் விஜய்சேதுபதியை போட்டியாளராக பார்க்காமல், சக நடிகராக பார்த்து வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Best wishes to @VijaySethuOffl bro for #SEETHAKAATHI release .. May your 25th film be a milestone in ur career.. Wishes to you and full team ????
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 20, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments