இந்த மூன்று பேரும் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு வரவேண்டும்: சிவகார்த்திகேயன் பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த மூன்று வீரர்களும் சிஎஸ்கே அணிக்கு வரவேண்டும் என்று சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நாளை பெங்களூரில் நடைபெற இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணிக்காக எந்தெந்த வீரர்களை ஏலம் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மனதிலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சிஎஸ்கே அணியில் யார் யாரெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து பிரபலங்களிடம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது இந்தப் பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசியபோது, ‘சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் நம்ம சென்னை அணிக்காக நம்ம ஊர் ஆட்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம் என்று கூறினார். குறிப்பாக அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.
அதேபோல் நடராஜன் சிஎஸ்கே அணிக்கு வர வேண்டும் என்றும் அவர் ஒரு சிறந்த ஒரு லெட்ப் ஆர்ம் பவுலர் என்றும், ஒரு லெப்ட் ஆர்ம் வேகப்பந்து பவுலர் சிஎஸ்கே அணியில் இருப்பது மிகப்பெரிய சொத்து என்றும் அவர் தெரிவித்தார். அடுத்ததாக ஷாருக்கான் சிஎஸ்கே அணிக்கு வரவேண்டும் என்றும் அவர் அடித்தால் பந்துக்கள் பயங்கரமாக பறக்கும் என்றும் இந்த மூன்று பேர்களையும் நான் சிஎஸ்கே வின் மஞ்சள் நிற ஜெர்ஸியில் பார்க்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
சிவகார்த்திகேயன் கூறிய மூன்று பேர்களையும் நாளை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com