சிவகார்த்திகேயன் கொடுத்த செக்-கில் இதனை கவனித்தீர்களா?

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நலிந்த நடிகர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த செக்கில் டுவிஸ்ட் உள்ளது தற்போது உள்ளது தெரியவந்துள்ளது

சமீபத்தில் பாஜக பிரமுகர் எச்.ராஜா அவர்கள் பேட்டி அளித்தபோது ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் என்பவரை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ என்றும் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் மகன் தான் சினிமா நட்சத்திரம் சிவகார்த்திகேயன் என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்பதும் அவர் இயற்கை மரணம் அடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடைய தந்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எச் ராஜாவுக்கு சிவகார்த்திகேயன் பதிலடி நேரடியாகக் கொடுக்கவில்லை என்றாலும் நடிகர் சங்கத்திற்கு அளித்த செக் மூலம் கொடுத்துள்ளார்

அந்த செக் அவரது தந்தையின் தாஸ் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட் என்பதும் அந்த ட்ரஸ்டின் மூலமாக தான் அவர் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தன்னுடைய தந்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எச் ராஜாவுக்கு மறைமுகமாக சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்து உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.