'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் இதுவா? வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,August 07 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படங்களில் சூரி பைக் ஓட்டுவது போன்றும் அவருக்கு பின்னால் சிவகார்த்திகேயன் பைக்கில் உட்கார்ந்து இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் சிவகார்த்திகேயன் கழுத்தில் ஒரு கேமரா இருப்பதை அடுத்து அவர் இந்த படத்தில் ஒரு போட்டோகிராபர் அல்லது பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, சூரி, ஷிவாங்கி உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு!

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

90களில் ஹிட் நாயகி… மகள்களுடன் இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “அழகன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்

வெளியே இப்படி பேசாத, நம்முடையது சொகுசு கார் தான்......! கிருத்திகாவிற்கு அறிவுரை கூறிய மதன்....!

நாம் வைத்துள்ள கார் சொகுசு கார் தான், வெளியே நீ அப்படியெல்லாம் பேசாத என்று பப்ஜி மதன், மனைவி கிருத்திகாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

தோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் புளூடிக்: ஒருசில மணி நேரங்களில் நடந்தது என்ன?

தல தோனியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த புளூடிக் திடீரென நீக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் கொந்தளித்து இருந்ததால் சில மணி நேரங்களில் மீண்டும் டுவிட்டர் நிர்வாகம் அவருடைய

ராகவா லாரன்ஸ் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் கோலிவுட் திரையுலகில் பிஸியான நட்சத்திரங்களில் ஒருவர் என்பதும் அவர் தற்போது 'ருத்ரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்