'கனா' படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர்

  • IndiaGlitz, [Sunday,December 16 2018]

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான 'கனா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி பெரும் போட்டியை சந்தித்து ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

அதில் ஒரு கட்டமாக ஒவ்வொரு தினமும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு முன் ஐஸ்வர்யா ராஜேஷ், கெளசல்யா முருகேசன் என்ற கேரக்டரிலும், சத்யராஜ், 'முருகேசன்' என்ற கேரக்டரிலும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், 'நெல்சன் திலீப்குமார்' என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலரில் சிவகார்த்திகேயன் பேசிய வசனமான 'இந்த உலகம் ஜெய்ச்சிடுவேன்னு சொன்னா கேட்காது, ஆனா ஜெய்ச்சவன் சொன்னா‌ கேட்கும். நீ‌ எத பேசறதா இருந்தாலும் ஜெய்ச்சிட்டு பேசு' என்ற வசனம் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.