இந்திய சினிமாவில் விஜய் தான் பெஸ்ட்: சிவகார்த்திகேயன் கூறும் காரணம் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

கோலிவுட் திரையுலகில் குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொண்ட சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய், விக்ரம் ஆகியோர்கள் குறித்து மனம் திறந்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் தளபதி விஜய் குறித்து சிவகார்த்திகேயன் குறிப்பிடும்போது, 'இந்தியாவிலேயே பெஸ்ட் நடிகர் விஜய்தான் என்றும் அதற்கு காரணம் இந்திய சினிமாவில் காமெடி, ஆக்சன், டான்ஸ் ஆகிய திறமைகளை ஒருங்கே கொண்ட நடிகர் இவர் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.

அஜித் குறித்து சிவகார்த்திகேயன் குறிப்பிடும்போது அவரது படங்களை பார்க்கும்போது ஒரு உத்வேகம் ஏற்படும் என்றும், அதுமட்டுமின்றி அவரை சந்தித்த அந்த தருணமும் ஞாபகத்தில் வரும் என்றும் கூறியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிகுமார் மற்றும் எம்.ராஜேஷ் ஆகிய இருவரின் படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது