பிரின்ஸஸ்-க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'பிரின்ஸ்' நாயகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இன்று அவரது பிரின்ஸஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் வைத்தனர்.
இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தனது 9வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அவரது குடும்பத்தினர்கள் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’எனது பிரின்ஸஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி தனது மகளுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு ‘ஆராவுக்கு எனது வாழ்த்துக்கள்’ என குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா, தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் அவர் தற்போது 'மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள ‘அயலான்’ என்ற திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவர் விரைவில் நான் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments