ஒருவழியாக 'அயலான்' படத்திற்கு கிடைத்தது விமோசனம்.. சூப்பர் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதன் பின் படப்பிடிப்பு தொடங்கி 5 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில் 'அயலான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை காலை வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து வந்ததாக கூறப்பட்டு வந்தாலும் இடையில் மிகப்பெரிய இடைவெளி விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் கிராபிக்ஸ் காட்சிகள் உட்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவல் படி நாளை காலை 11:04 மணிக்கு 'அயலான்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Here's what you've all been asking for! And it's coming to you bigger and grander 🔥
— KJR Studios (@kjr_studios) April 23, 2023
Tomorrow 11:04 AM #AyalaanUpdate ❤️👽#Ayalaan @Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @24amstudios @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben… pic.twitter.com/9lxlJCmo0I
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com