சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியான 'அயலான்' படத்தில் அசத்தல் ஸ்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் தெரிவிக்கும் வகையில் ‘அயலான்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள சூப்பர் ஸ்டில் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷால் நடித்த டைம் டிராவலிங் படமான ’இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான ‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன
இயக்குனர் ரவிகுமார் தனது முதல் படம் போலவே இந்த படத்திலும் சயின்ஸ் பிக்சன் காட்சிகள் கொண்ட ஒரு ரொமான்ஸ் காமெடி படமாக உருவாக்கியுள்ளார் என்பதும் இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘அயலான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ‘அயலான்’ படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Wishing you a super-delightful birthday and great fortune @Siva_Kartikeyan. Have a vera level year ahead, Sago!✨
— KJR Studios (@kjr_studios) February 17, 2022
Wishes from Team #Ayalaan#HappyBirthdaySivakarthikeyan #HBDSivakarthikeyan #HBDSK #HBDPrinceSK @Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @24amstudios pic.twitter.com/nZZKJiLZTD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments