மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ.. சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ மற்றும் ‘2.0’ படத்திற்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் என இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மனிதன் குறித்த காட்சி மிரட்டல் ஆகவே உள்ளது. அதேபோல் இசை புயல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை அசத்தலாக உள்ளதை எடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்வில் ‘அயலான்’ படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரைநிர்வாண கோலத்தில் 'செவ்வாய்கிழமை' நடிகை.. வைரலாகும் போஸ்டர்..!

'செவ்வாய்கிழமை' என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் போஸ்டர் வெளியாகி இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் 'வேல்' படத்தில் நடித்தது இந்த சீரியல் நடிகையின் கணவரா?  வைரல் புகைப்படம்..!

16 ஆண்டுகளுக்கு முன் வெளியான சூர்யாவின் 'வேல்' படத்தில் பிரபல தொலைக்காட்சியின் நடிகையின் கணவர் நடித்துள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் வாங்கியவுடன் அடித்த அதிர்ஷ்டம்.. திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற பிக்பாஸ் ரக்‌ஷிதா..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்‌ஷிதா சமீபத்தில் கார் வாங்கிய நிலையில் கார் வாங்கிய அதிர்ஷ்டத்தில் அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது

அஜித்தை கட்டிப்பிடித்து.. கன்னத்தோடு கன்னம் உரசி.. திருமண நாளில் ஷாலினியின் ரொமான்ஸ் பதிவு..!

 அஜித் மற்றும் ஷாலினி கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அஜித் - ஷாலினி தம்பதியின் 23 வது திருமண நாள் கொண்டாடப்பட்டது.

ஸ்ருதிஹாசனின் ஆன்மீக டாட்டூ.. பகுத்தறிவாளர் கமலுக்கு இப்படி ஒரு மகளா?

உலகநாயகன் கமலஹாசன் பகுத்தறிவு கொள்கையை கடைப்பிடித்து வரும் நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார்