மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ.. சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ மற்றும் ‘2.0’ படத்திற்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் என இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
மேலும் வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மனிதன் குறித்த காட்சி மிரட்டல் ஆகவே உள்ளது. அதேபோல் இசை புயல் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை அசத்தலாக உள்ளதை எடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் திரை உலக வாழ்வில் ‘அயலான்’ படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you all for your love for the poster ❤️ Here is a glimpse of our #Ayalaan Live in action 👽#AyalaanFromDiwali2023 💥@Ravikumar_Dir @arrahman @kjr_studios @24amstudios @Phantomfxstudio @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben… pic.twitter.com/9yWdZXpQaa
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com