'அயலான்' படத்தின் சூப்பர் அப்டேட்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Monday,February 15 2021]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ’அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ’அயலான்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று சற்றுமுன் படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ’அயலான்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 17ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ’நேற்று இன்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ’டான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபிசக்கரவர்த்தி இயக்கி வரும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வேற லெவல் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் நடிகை… குவியும் லைக்ஸ்!

“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்“ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

கொரோனா வைரஸால் கை விரல்கள் அழுகிய கொடூரம்…. இன்னும் சில பகீர் தகவல்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதயத்தில் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, ஏன் மூளையில் கூட பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

5,000 ஆண்டு பழமையான மது ஆலை? அசந்துபோன ஆய்வாளர்கள்!

பழமைக்கும் விசித்திரத்துக்கும் பெயர்போன எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான மது ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு! பரபரப்பு சம்பவம்!

இந்தியக் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த யுவராஜ் சிங், தலித் சமூகத்தை அவமரியாதை செய்தார் என்ற குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

கட்டணம் இல்லாத இலவச செல்போன் குறைதீர்ப்புத் திட்டம்… முதல்வரை பாராட்டும் சாமானிய மக்கள்!

1100  என்ற செல்போன் எண்ணைக் கொண்டு இனி இலவசமாக மக்கள் தங்களின் குறைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.