close
Choose your channels

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைந்த பிரபலம்.. சூப்பர் வீடியோ..!

Saturday, August 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்.கே 23’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மலையாள திரை உலகின் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முதல்முறையாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார் என்பதும் இன்னொரு நாயகியாக கீர்த்தி சனோன் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.

ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் ’துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் பிஜு மேனன் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

நடிகர் பிஜு மேனன் ஏற்கனவே தமிழில் ’மஜா’ ’தம்பி’ ’பழனி’ ’அரசாங்கம்’ ’போர்க்களம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் மலையாளத்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment