'அயலான்' டீசர் எப்போது? சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’லால் சலாம்’ படமும் பொங்கல் தினத்தில் வெளியானாலும் ’அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. அந்த வகையில் சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் டீசர் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

’அயலான்’ படத்தின் டீசர் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசரை தயார் செய்யும் ஏஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் ரவிக்குமாரின் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

More News

'தலைவர் 170' படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும்

முதல் நாள் முதல் பாடல்.. ரவீனாவை இடுப்பில் தூக்கி உட்கார வைத்த மணி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் நாளில் வேக்கப் பாடல்

'தளபதி 68' படத்தில் விஜய்க்கு இவ்வளவு சின்ன வயது கேரக்டரா? மாஸ் காட்சிகளுக்கு உத்தரவாதம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'தளபதி 68' படத்தில் 80களின் சூப்பர் ஹிட் பட ஹீரோ? ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்தில் 80களின் சூப்பர் ஹிட் படங்களை

முதல் நாளே 6 பேருக்கு தண்டனை கொடுத்த பிக்பாஸ்.. பெட்டி படுக்கையுடன் வெளியேறியதால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் முதல் கட்டமாக கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்