'அயலான்' இசை வெளியீட்டு விழா எந்த நாட்டில்? எப்போது? சிவகார்த்திகேயன் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,January 04 2024]

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக சர்வதேச அளவில் கவனத்தை பெரும் வகையில் நடத்தப்பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ரவிகுமார் ஆகியோர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'அயலான்’ படத்தை இசை வெளியீட்டு விழா துபாயில் ஜேபிஆர் பீச்சில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இசை வெளியீட்டு விழா சென்னையில் மட்டுமே நடந்த நிலையில் தற்போது சில படங்களின் இசை வெளியீட்டு விழா துபாயில் நடந்து வருவதால் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.