நிறுத்தும்மா.. அப்படி சொல்லாதே.. சாய்பல்லவியால் கடுப்பான சிவகார்த்திகேயன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடந்த ‘அமரன்’ இசை வெளியீட்டு விழாவில் ‘நடிகை சாய் பல்லவி தன்னை அண்ணா என்று அழைத்ததாகவும், அதனால் தான் கடுப்பானதாகவும், நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்தியாவுக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் தீபாவளி என்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகும் விழா நடந்த நிலையில், இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது சாய் பல்லவி குறித்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை தெரிவித்தார். ’பொதுவாக, டீச்சர் என்றாலே மாணவர்கள் தெறித்து ஓடுவார்கள்; ஆனால் முதல் முறையாக மலர் டீச்சருக்கு இவ்வளவு மரியாதையா என்று ஆச்சரியமடைந்தேன்.
‘பிரேமம்’ படம் பார்த்த பிறகு, நானும் மலர் டீச்சர் ரசிகர் ஆனேன். அவரது மொபைல் எண்ணை வாங்கி, அவரிடம் பேசினேன். "சூப்பராக நடித்துள்ளீர்கள். அறிமுக காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் சூப்பர்," என்று கூறினேன். அதற்கு சாய் பல்லவி மிகவும் நன்றி "அண்ணா" என்று கூறிய போது எனக்கு கடுப்பாகி விட்டது.
"நிறுத்தமா," என்று கூறிய நான், நான் மலர் டீச்சரிடம் பேசுவது போல் பேசுகிறேன். "நீங்கள் ஏன் சாய் பல்லவி மாதிரி பேசுகிறீர்கள்? என்னை 'அண்ணா' என்று மட்டும் அழைக்காதே. நாம் என்றாவது ஒருநாள் இணைந்து ஒரு படம் பண்ணுவோம்," என்றேன். அது தற்போது நிறைவேறியுள்ளது என்று கூறினார்.
மேலும், சாய் பல்லவி தன்னை ஒரு சிறந்த நடிகையாக உயர்த்திக் கொண்டு வருகிறார் என்றும், நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் என்றும், அவர் ஒரு பிராண்ட் என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments