ரஜினி-விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தபோதிலும் அவர்களுடைய பாடல்களுக்கு யூடியூபில் கிடைத்த பார்வையாளர்களைவிட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் பாடல்களுக்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களை பெற்ற 10 பாடல்கல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி
1. சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்' படத்தின் பாடலான 'உன் மேல ஒரு கண்ணு' பாடலை 2,28,34,878 பேர் பார்த்துள்ளனர்.
2. விஜய்சேதுபதியின் 'சேதுபதி' படத்தில் இடம்பெற்ற 'கொஞ்சி பேச வேணாம்' பாடலுக்கு 1,26,20,351 பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.
3. அரண்மனை படத்தின் பாடல் 'குச்சி மிட்டாய்" பாடலை 86,51,836 பேர் பார்த்துள்ளனர்.
4. விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற 'ஹவா ஹவா' பாடலுக்கு 74,52,050 பேர் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.
5. விஷாலின் 'கதகளி' படத்தின் பாடலான 'அழகே' பாடலுக்கு 63,70,434 பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.
6. விஜய்சேதுபதியின் தர்மதுரை படத்தின் பாடலான 'ஆண்டிப்பட்டி' பாடலை 61,20,387 பேர் பார்த்துள்ளனர்.
7. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'மாயநதி' பாடலை 60,56,516 பேர் பார்த்துள்ளனர்.
8. விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' பாடல் 'மக்கா கலங்குதப்பா' பாடலை 57,23,510 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
9. தினேஷின் ஒருநாள் கூத்து' பட பாடலான 'அடியே அழகே' பாடலை 55,44,801 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
10. இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'என் ஜீவான்' பாடலை 51,84,377 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இந்த வருடம் வெளியான பாடல்களில் முதல் இடத்தை சிவகார்த்திகேயன் படத்தின் பாடலும், 2,4,6,8 ஆகிய இடங்களில் விஜய்சேதுபதி படத்தின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. ரஜினி மற்றும் விஜய் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை விட சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்களின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷ்ணுவுடன் முதன்முறையாக இணையும் அமலாபால்

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து குறித்த அறிவிப்பை சமீபத்தில் அறிவித்த நடிகை அமலாபால், தற்போது கோலிவுட்டில் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப சென்ற வேன் திடீர் மாயம். ரூ.1.37 கோடி எங்கே?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதன் காரணமாக இரவுபகலாக இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

'கிக்' பட சர்ச்சை. லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே ரஜினிமுருகன்' படத்தில் இடம்பெற்ற 'என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா' பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'கிக்' என்ற 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் இடம்பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நி&#

விஜய்யின் அணுகுமுறையை ரஜினியிடம் எதிர்பார்த்தேன் : அமீர்

பிரதமர் நரேந்திரமோடி கருப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிப்பதற்காக சமீபத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையான ரூ.500, ரூ.1000...

ரூபாய் நோட்டுக்கு எதிரான போராட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவி

பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில்...