ரஜினி-விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தபோதிலும் அவர்களுடைய பாடல்களுக்கு யூடியூபில் கிடைத்த பார்வையாளர்களைவிட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் பாடல்களுக்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களை பெற்ற 10 பாடல்கல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி
1. சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்' படத்தின் பாடலான 'உன் மேல ஒரு கண்ணு' பாடலை 2,28,34,878 பேர் பார்த்துள்ளனர்.
2. விஜய்சேதுபதியின் 'சேதுபதி' படத்தில் இடம்பெற்ற 'கொஞ்சி பேச வேணாம்' பாடலுக்கு 1,26,20,351 பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.
3. அரண்மனை படத்தின் பாடல் 'குச்சி மிட்டாய்" பாடலை 86,51,836 பேர் பார்த்துள்ளனர்.
4. விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற 'ஹவா ஹவா' பாடலுக்கு 74,52,050 பேர் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.
5. விஷாலின் 'கதகளி' படத்தின் பாடலான 'அழகே' பாடலுக்கு 63,70,434 பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.
6. விஜய்சேதுபதியின் தர்மதுரை படத்தின் பாடலான 'ஆண்டிப்பட்டி' பாடலை 61,20,387 பேர் பார்த்துள்ளனர்.
7. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'மாயநதி' பாடலை 60,56,516 பேர் பார்த்துள்ளனர்.
8. விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' பாடல் 'மக்கா கலங்குதப்பா' பாடலை 57,23,510 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
9. தினேஷின் ஒருநாள் கூத்து' பட பாடலான 'அடியே அழகே' பாடலை 55,44,801 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
10. இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'என் ஜீவான்' பாடலை 51,84,377 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
இந்த வருடம் வெளியான பாடல்களில் முதல் இடத்தை சிவகார்த்திகேயன் படத்தின் பாடலும், 2,4,6,8 ஆகிய இடங்களில் விஜய்சேதுபதி படத்தின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. ரஜினி மற்றும் விஜய் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை விட சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்களின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.