சூரி ஹீரோ, சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர். டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,March 10 2023]

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று காலை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானதை பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ’கொட்டுக்காளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ’பெப்பில்ஸ்’ சென்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பதும், இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் நாயகனாக சூரி நடிக்க இருப்பதாகவும் நாயகியாக அன்னாபென் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை அன்னாபென் மலையாள திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக சூப்பர் ஹிட் ஆன ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் நாயகி இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சக்திவேல் ஒளிப்பதிவில் கணேஷ் சிவா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.