சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் யார் யார்? முழு தகவல்கள்

  • IndiaGlitz, [Wednesday,June 27 2018]

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து வந்த 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் வினாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் எம்.ராஜேஷ் மற்றும் இயக்குனர் ரவிகுமார் ஆகியோர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று சிவகார்த்திகேயன் - ரவிகுமார் படத்தின் பூஜை இனிதே நடந்தது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கின்றார். மேலும் முக்கிய வேடங்களில் கருணாகரன், யோகிபாபு,, கலக்க போவது யாரு' புகழ் கோதண்டம் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இயக்குனர் ரவிகுமாரின் முதல் படமான 'இன்று நேற்று நாளை' போலவே விஞ்ஞானம் சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விஜய்சேதுபதியுடன் மீண்டும் நயன்தாரா: பர்ஸ்ட்லுக் வெளியீடு

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரெளடிதான்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, திரையில் இந்த ஜோடியின் கெமிக்ஸ்ட்ரி அனைவராலும் ரசிக்கப்பட்டது.

பண்ண மாட்டேன், முடியாது: ஷாரிக்குடன் மல்லுகட்டும் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது நாளான நேற்று எஜமானர்-வேலைக்காரி என்ற டாஸ்க் லக்சரி பட்ஜெட்டுக்காக கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் வேலைக்காரிகளாகவும் நடிக்கவேண்டும்.

முன்னாள் மனைவியின் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவர்ஸ்டார் பவன்கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் விரைவில் மறுமணம் செய்யவுள்ளார் என்பதையும்

எஜமானர்-வேலைக்காரி டாஸ்க்: முரண்டு பிடிக்கும் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூளையை கசக்கி உருவாக்கிய டாஸ்க் போல் தெரிகிறது இந்த எஜமானர்-வேலைக்காரி டாஸ்க்.

மீண்டும் இணையும் 'என்னை அறிந்தால்' கூட்டணி

அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் போலீஸ் கேரக்டர்களில் நடித்திருந்த அஜித்-விவேக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.