சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் சமூகவலைதளத்தில் டாக்டர் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது