சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' டிராக் லிஸ்ட்

  • IndiaGlitz, [Sunday,December 03 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது. இளம் இசைப்புயல் அனிருத் இசையில் இந்த படத்தில் ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது.

1. கருத்தவனெல்லாம் கலீஜா' என்று தொடங்கும் முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாட, பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இந்த பாடல் ஏற்கனவே சிங்கிள் பாடலாக வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே

2. 'இறைவா' என்று தொடங்கும் இந்த இரண்டாவது பாடலும் சிங்கிள் பாடலாக ஏற்கனவே வெளிவந்த பாடல் தான். விவேகா எழுதியுள்ள இந்த பாடலை அனிருத், ஜோண்டாகாந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.

3. 'எழு வேலைக்காரா' என்று தொடங்கும் இந்த மூன்றாவது பாடலை சித்தார்த் மகேந்திரன் குழுவினர் பாட, இந்த பாடலையும் விவேகா எழுதியுள்ளார்

4. 'இதயனே' என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் மற்றும் நீதிமோகன் ஆகியோர் பாடல், கவிஞர் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார்.

5. வா வேலைக்காரா' என்ற இந்த பாடலை சக்திஸ்ரீ கோபாலன், பியான் சுர்ராவ் ஆகியோர் பாட இந்த பாடலையும் விவேகா எழுதியுள்ளார்