Mr.லோக்கல் அதிகாரபூர்வ புதிய ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1ஆம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் மே 17ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் புரடொக்சன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் சமீபத்திய விளம்பரங்களில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இல்லாததால் இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போகும் என ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நாளை அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவிக்கே தெரியாமல் 47 குழந்தைக்கு தந்தையான கணவர்! எப்படி சாத்தியம்!

சில சமயங்களில், உலகில் நடக்கும் சில ஆச்சர்யமான சம்பவங்கள் நம்மை வியப்படைய செய்கிறது. இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வியையும் நம்மில் விதைக்கிறது...

சர்கார் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு: 49P விதிப்படி வாக்களித்த வாக்காளர்: 

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தில் 49P என்ற தேர்தல் விதிமுறை குறித்து விளக்கப்பட்டிருக்கும்.

ஜெயம் ரவியின் 25வது படம் குறித்த முக்கிய தகவல்

கடந்த 2003ஆம் ஆண்டு 'ஜெயம்' படத்தில் தமிழில் அறிமுகமான ஜெயம் ரவி 16 ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது 25வது படம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல நடிகர்!

நடிகர் கார்த்தியும், நடிகை ஜோதிகாவும் ஒரு படத்தில் அக்கா தம்பியாக நடிக்கவுள்ளனர் என்பதையும் இந்த படத்தை 'பாபநாசம்' புகழ் ஜீத்துஜோசப் இயக்கவுள்ளார்

சென்னை வாக்காளர்களுக்கு என்ன ஆச்சு? தமிழத்திலேயே குறைந்த சதவீதம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவிக்கையில்