நாயகியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Friday,September 30 2022]

நாயகியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பிரின்ஸ்’ திரைப்படத்தில் உக்ரைன் நாட்டின் நடிகை மரியா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் இந்த படத்தின் நாயகியான மரியா உள்பட படக்குழுவினர் அனைவருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகிறது.

மேலும் இந்த பதிவில், ‘‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்றும் தீபாவளி அன்று உங்கள் எல்லோரையும் திரையரங்குகளில் சந்திக்கிறோம் என்றும் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன என்பதும் இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'பொன்னியின் செல்வன்' தமிழில் ரிலீஸ் ஆகின்றதா? கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டர் பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆகிறதா என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

செப்.30 'பொன்னியின் செல்வன்' ரிலீஸ் நாள் மட்டுமல்ல.. த்ரிஷாவுக்கு மேலும் ஒரு மறக்க முடியாத நாள்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 

2 வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆன படத்தில் நடித்த நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி சம்மதத்துடன் காதலியுடன் திருமணம்.. 2 மனைவிகளின் டார்ச்சரால் வாலிபர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மனைவி சம்மதத்துடன் தான் காதலித்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபர் ஒருவர் எடுத்த அதிரடி முடிவால் இரண்டு மனைவிகளும் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். 

தனுஷ் கேரக்டரில் நான், எனது கேரக்டரில் தனுஷ்.. பார்த்திபன் கூறிய ஆச்சரிய தகவல்!

தனுஷ் நடிக்க இருந்த கேரக்டரில் தான் நடித்ததாகவும், தான் நடிக்க இருக்கும் கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.