close
Choose your channels

முதல்முறையாக இணைகிறார்களா சிவகார்த்திகேயன் - கெளதம் மேனன்? தயாரிப்பாளர் இவர்தான்!

Thursday, August 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் தற்போது சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விக்ரம் நடித்துவரும் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை அவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கி வரும் படங்களை தயாரித்து வரும் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அநேகமாக அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் அல்லது அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment