சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் டைட்டில் இதுவா? மீண்டும் ரஜினி ரெஃப்ரன்ஸ்?

  • IndiaGlitz, [Thursday,July 04 2024]

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ’அமரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அதேபோல் அவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 23’ படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார் என்பதும் ஏற்கனவே இருவரும் இணைந்த ’டான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில் மீண்டும் இருவரும் இந்த படத்தின் மூலம் இணையவுள்ளனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இணையும் படத்தில் ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பதும் அது மட்டுமின்றி இந்த படத்தின் முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தின் டைட்டில் ’பாஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ திரைப்படத்தில் ’தி பாஸ்’ என்ற வார்த்தை கேப்ஷனாக இருந்த நிலையில் தற்போது அதையே தனது படத்திற்கு சிவகார்த்திகேயன் டைட்டில் ஆக வைக்க இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே ’ரஜினி முருகன்’ ’மாவீரன்’ ‘வேலைக்காரன்’ உட்பட சில சிவகார்த்திகேயன் படங்களின் டைட்டிலில் ரஜினி ரெஃபரன்ஸ் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி ரெஃபரன்ஸ் உடன் ஒரு படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.