சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படம் மல்டிஸ்டார் படமா? 2 பிரபலங்கள் இணைந்ததாக தகவல்..!

  • IndiaGlitz, [Monday,February 05 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ’எஸ்.கே 21’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு மீண்டும் முருகதாஸ் ரீஎண்ட்ரி ஆக உள்ளதால் இந்த படத்திற்காக அவர் மாஸ் திரைக்கதை தயார் செய்துள்ளதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் இணைந்து உள்ளதாகவும் அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் மேலும் சில பிரபலங்கள் இந்த படத்தில் இணையலாம் என்று தெரிகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது மிருணாள் தாக்கூர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இருவரில் ஒருவர் இந்த படத்தின் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிரடி ஆக்சன் படமாக ஹாலிவுட் ஸ்டைலில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படம் சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் ஆகிய இருவருக்குமே ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

'தெறி' இந்தி ரீமேக் டைட்டிலை அறிவித்த அட்லி.. ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான 'தெறி' என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்

நடிகை ரஜிஷா விஜயன் காதலர் இந்த திரையுலக பிரபலமா? திருமணம் எப்போது?

தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையான ரஜிஷா விஜயன் கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலம் ஒருவரை காதலித்து வரும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக

சமூக வலைத்தளத்தில் அறிமுகமான இளம்பெண்.. நிர்வாண பட ஆசை காட்டி நடிகரை ஏமாற்றிய சம்பவம்..!

நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனுப்புவதாக ஆசை காட்டி துணை நடிகர் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் பண மோசடி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி 9ல் வெளியாகும் படக்குழுவிற்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து.. நெகிழ்ச்சி அடைந்த ஹீரோ..!

பிப்ரவரி 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' மணிகண்டன் நடித்த 'லவ்வர்' உள்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'லவ்வர்'

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக்குழுவுக்கு கிராமி விருது.. ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக் குழுவின் ஆல்பத்திற்கு கிராமிய விருது கிடைத்துள்ளதை அடுத்து  இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.