உறுதியானது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ்.. நாயகி இந்த பிரபலமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியான நிலையில் இன்று அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய 23வது திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதை உறுதி செய்தார்.
இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன படம் என்றும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் திரைப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் நாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ’சீதாராமம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கமர்ஷியல் அதிரடி ஆக்சன் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக உள்ள இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Dear @ARMurugadoss sir,
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 25, 2023
Wishing you a very happy birthday sir 😊👍
Sir I’m extremely delighted to join with you for my 23rd film and I'm double delighted after listening to your narration. This film is going to be very special for me in all aspects and I can’t wait to start… pic.twitter.com/XiOye1GmuL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments