'தளபதி' ரீமேக்கில் அனிருத்-சிவகார்த்திகேயன்?

  • IndiaGlitz, [Monday,July 29 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஆகிய இருவரும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'தளபதி'. மணிரத்தினம் இயக்கிய இந்த திரைப்படம் இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டால் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் பல திரைப்படங்கள் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், 'தளபதி' திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டால் இந்த படத்தில் ரஜினி மற்றும் மம்முட்டி கேரக்டரில் நடிப்பது யார் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது

இதுகுறித்து நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சி ஒன்றில் அனிருத் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியில் 'தளபதி' படத்தின் ரீமேக்கில் ரஜினியின் சூர்யா கேரக்டரில் அனிருத் நடித்தால், மம்முட்டியின் தேவா கேரக்டரில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்? என்று கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த அனிருத், தேவா கேரக்டரில் சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என்று கூறினார். அவரது பதிலால் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'தளபதி' திரைப்படம் ரீமேக் செய்யப்படுமா? அதில் அனிருத், சிவகார்த்திகேயன் நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்