close
Choose your channels

சிவகார்த்திகேயன் வீட்டிற்கு வந்த புது இளவரசன்.. மகிழ்ச்சியில் குடும்பம்..!

Monday, June 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வெளியான குடும்ப புகைப்படத்தில் தெரிந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இது குறித்து சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் ’எங்களுக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம், ஆராதனாவிற்கும் குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என்று சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா, குகன் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இது மூன்றாவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment