நாம் செய்யும் முதல் தவறு இதுதான்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான உடல்பருமன் தடுப்புத் திட்டம் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் பீட்சா, பர்கர் மற்றும் கூல்டிரிங்க்ஸ் சாப்பிடுவதே நாம் செய்யும் முதல் தவறு என்று கூறியதோடு அதற்கு பதிலாக இளநீர் மற்றும் நுங்கு சாப்பிடுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில் கூறியதாவது:
கோவை எனக்கு புதியதல்ல. என் தந்தை மூன்று வருடங்கள் இங்குதான் பணிபுரிந்தார். அப்போது இதே மைதானத்தில் பலமுறை நான் வந்துள்ளேன். இனிமேல் யாரும் குண்டாக இருப்பவரை கேலி செய்ய கூடாது. அதற்கு பதிலாக நான் கூறும் அறிவுரையை அவர்களுக்கு கூறி குண்டு உடலை குறைக்க அறிவுறுத்துங்கள்
பீட்சா, பர்கர் பலருக்கும் பிடிக்கும் உணவு. ஆனால் பிட்சா, பர்கர் எல்லா சாப்பிடக்கூடாது. அது உடம்புக்கு கெடுதலை தரும். உடல் எடையை அதிகரிக்கும். உடல் பருமன் வாழ்க்கை முறை மாறியதால் வந்த விஷயம். எனவே, நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் பருமனைக் குறைத்துவிடலாம். அதேபோல, கூல்டிரிங்ஸையும் குடிக்க வெண்டாம். நான் கூல்டிரிங்க்ஸ் குடிக்கறத விட்டு ஏழு வருஷம் ஆச்சு. நான் இப்படி சொல்றதனால, கூல்டிரிங்ஸ் நிறுவனங்கள் என் மீது கோபப்பட வாய்ப்புள்ளது. அதற்கு பதில் நுங்கு, இளநீர், பழச்சாறுகள், காய்கறி ஜூஸ் சாப்பிடுங்கள். அவை கொஞ்சம் டேஸ்ட் குறைவாக இருந்தாலும் உடலுக்கு நல்லது
மக்களுக்கு கேடு விளைவிக்கற எந்த ஒரு விஷயத்த பண்ணக்கூடாது என்பதால் ஒரு கூல்டிரிங்க்ஸ் கம்பெனியோட விளம்பரத்துல நடிக்க மறுத்துட்டேன். நான் இந்த நிலைமைல இருக்க மக்கள்தான் காரணம். என்ன நம்பி தியேட்டருக்கு வந்து, என்ன இந்த இடத்துல வெச்சுருக்கற மக்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு நன்மையத்தான் செய்யணும்.
அதுக்காகத்தான் வேலைக்காரன் மாதிரியான படங்கள நடிக்கறேன். அந்தப் படத்துல உணவு பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லியிருப்போம். காமெடி படங்கள் மட்டும் இல்லாம, அப்பப்ப வேலைக்காரன் மாதிரியான படங்களில் நடிக்கவும் ஆசை' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments