அனுவை அடுத்து விஷ்ணு, பிரக்ரிதியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Sunday,September 05 2021]

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்ற வெள்ளைப் புலியைப் தத்தெடுத்தார் என்பது தெரிந்ததே. 10 வயதாகும் அந்த வெள்ளைப்புலிக்கு தேவையான உணவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் அவர் பொறுப்பு ஏற்பதாக பூங்கா நிர்வாகிகளிடம் உறுதிமொழி கொடுத்து இருந்ததாக தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் அந்த அனு என்ற வெள்ளை புலி பார்த்தனர் என்பதும் இதை சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனுவை அடுத்து தற்போது விஷ்ணு என்ற சிங்கத்தையும், பிரகுர்தி என்ற யானையையும் அவர் தத்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஷ்ணு சிங்கம் மற்றும் பிரகுர்தி யானை ஆகிய இரண்டையும் சிவகார்த்திகேயன் ஆறு மாதங்களுக்குத் தத்தெடுத்துள்ளதாகவும், இந்த இரண்டு விலங்குகளுக்கும் தேவையான உணவு உள்பட அனைத்து செலவுகளுக்கும் அவர் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.