பிரபல கிரிக்கெட் வீரரின் கேரக்டரில் 'கனா' சிவகார்த்திகேயன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று முடிவடைந்த பின்னர், படக்குழுவினர்கள் பாராட்டு மழையில் நனைந்தனர். குறிப்பாக ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதே பாராட்டு வரும் 21ஆம் தேதி ரசிகர்களிடம் இருந்தும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நெல்சன் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். நெல்சன் இந்திய அணிக்கு விளையாடியபோது தத்தளித்து கொண்டிருந்த அணியை தனது அபாரமான பேட்டிங்கால் காப்பாற்றிவிடுவார். ஆனால் அதே நேரத்தில் அந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும்போது அவரது கண் பாதிப்புக்குள்ளாகி பின்னர் கிரிக்கெட்டில் இருந்தே விலகிவிடுவார்.
இந்த கேரக்டர் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சபாகரீமின் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்றுதான் கிரிக்கெட்.போட்டியொன்றில் பந்து கண்ணை தாக்கியதில் சர்வதேச போட்டிகளிலிலிருந்து சபா ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com