close
Choose your channels

சூர்யா நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன்.. தனுஷ் ஏமாற்றமா?

Tuesday, July 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிக்க இருந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனுஷ் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சூர்யா நடித்த தயாரிக்கும் ’புறநானூறு’ என்ற திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதாகவும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க வைக்க சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி ’புறநானூறு’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் ஒப்பந்தமும் கையெழுத்து இடப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனுஷ் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாகவும் கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது.

முதல்முறையாக சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி இணையும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தை விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தயாரிக்க இருப்பதாகவும் இது அவரது முதல் தயாரிப்பு படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ’அமரன்’ மற்றும் ’எஸ்கே 23’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அவர் ‘டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இந்த 3 படங்களையும் முடித்துவிட்டு சுதா கோங்கரா படத்திற்கு வருவார் என்றும், இந்த படம் சிவகார்த்திகேயன் 25 வது படமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment