அருவி இயக்குனரின் 'வாழ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கின்றாரா?

  • IndiaGlitz, [Friday,June 28 2019]

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கனா' மற்றும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' ஆகிய படங்கள் வெளியான நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படத்தின் டைட்டில் 'வாழ்' என நேற்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தை 'அருவி' இயக்குனர் அருண்பிரபு இயக்கி வருகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் நானும் உறவினர்கள் என்றும், 'அருவி' படத்திற்கு முன்னரே இந்த படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் 'அருவி' பட வாய்ப்பு வந்ததால் இந்த படம் தள்ளி போனதாகவும் கூறிய அருண்பிரபு, 'அருவி'யின் வெற்றியால் தனக்கு பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும், தன்னிடம் இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

'அருவி' போலவே இந்த படத்திலும் காதல், காமெடி உள்பட அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று அருண்குமார் கூறினார். மேலும் 'கனா' படம் போலவே சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவலை அருண்குமார் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'பேட்ட' வில்லனுடன் ஜோடி சேரும் தமன்னா!

தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக இருந்து வரும் தமன்னா அவ்வப்போது பாலிவுட்டிலும் படங்கள் நடித்து வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட

பிகில் படத்தில் விஜய் காவி வேட்டி கட்டியது ஏன்? எஸ்.ஏ.சி.யின் ஆவேச பதில்

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அதில் விஜய் காவி வேட்டி கட்டி சிலுவை அணிந்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது

தினமும் என்ன அழவைக்கிறாங்களே! மிரளும் மீரா, உக்கிரத்தில் வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து போட்டியாளர்களுடன் கலந்து கொண்ட மீரா மிதுனை பார்த்தவுடனே அபிராமி வெறுக்க தொடங்க அவருக்கு ஆதரவாக வனிதாவும் இருப்பதால்

முகன்ராவ் மீது ஐஸ்வர்யா தத்தாவுக்கு காதலா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று 15 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இரண்டே நாளில் 16வது போட்டியாளராக மீராமிதுன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில்

ஹரிஷ் கல்யாணை அடுத்து லூஸ்லியாவுக்கு ஆதரவு தரும் இன்னொரு பிக்பாஸ் பிரபலம்!

ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பட பாடலை நேற்று லூஸ்லியா பாடியதை அடுத்து நடிகரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஹரிஷ் கல்யாண்,