ரஜினி, விஜய், அஜித் சாதனையை தொட்ட சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Friday,September 14 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே மாஸ் நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார் என்பதை அவரது படங்களின் ஓப்பனிங் வசூல் தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் படங்கள் மட்டுமே செய்த சாதனையை சிவகார்த்திகேயன் படமும் செய்துள்ளது.

நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இரண்டு இலக்க கோடிகளில் இதுவரை ரஜினி, விஜய் மற்றும் அஜித் படங்கள் மட்டுமே எட்டியுள்ளது. இதனையடுத்து இந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

விஜய்யின் 'மெர்சல்' முதல் நாளில் ரூ.23 கோடியும், ரஜினியின் 'கபாலி' முதல் நாளில் ரூ.19 கோடியும், அஜித்தின் 'விவேகம்' முதல் நாளில் ரூ17 கோடியும் தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் சீமராஜாவும் இரண்டு இலக்க கோடிகளில் வசூல் செய்துள்ளது. குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயன் பெற்ற இந்த அபார வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.