சிவகார்த்திகேயனுக்கு இன்று விசேஷமான நாள்.. மனைவி ஆர்த்தி கூறியது என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,August 27 2024]
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விசேஷமான நாளை அடுத்து அவரது மனைவி சமூக வலைதளத்தில் கூறிய பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 14 வருடங்களுக்கு முன்பு அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே தனது உறவினரான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிகள் 14வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் ஆர்த்தி தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் ’என்னில் சிறந்த ஒரு பகுதி நீங்கள், நான் உங்களை முடிவில்லாமல் நேசிக்கிறேன்’ என்று கூறி இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’அமரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ’டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ என்ற படத்தில் நடிக்க இருக்கும் சிவகார்த்திகேயன், அதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.