சிவகார்த்திகேயனின் திடீர் மலேசிய பயணம் எதற்காக?

  • IndiaGlitz, [Wednesday,September 28 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக இந்த படத்தின் புரமோஷன் மலேசியாவில் வரும் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது. இந்த புரமோஷன் விழாவுக்காக சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர்களில் முக்கியமானவர்கள் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர்.
இந்த தகவலால் மலேசியாவில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளதாகவும், சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவர்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.